Tuesday, August 9, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 27 ஏ பி நாகராஜன்

                                     
கதை வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ஏ பி நாகராஜன் 1928ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.

1949ல் பழநி கதிரவன் நாடகக் குழுவை ஆரம்பித்து நாடகங்கள் நடத்தி வந்தார்.அவற்றுள் ஒன்று நால்வர் என்ற நாடகம்.1953ல் இவரே கதாநாயகனாக நடிக்க நால்வர் திரைப்படமானது.இவரது திரைப் பயணமும் தொடங்கியது.

முன்னதாக இவரது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் குப்புசாமி.டி.கே.எஸ்.குழுவில் சில காலம் இவர் நடித்து வந்தார்.அப்போது அக்குழுவில் பல குப்புசாமிகள் இருந்ததால் நாகராஜன் எனப் பெயர் மாற்றப்பட்டார்.

ஆரம்பக் காலங்களில் எம்.ஏ.வேணு இயக்கிய பல படங்களில் நடித்தார்.அவற்றுள் சில..

மாங்கல்யம், நல்லதங்கை, பெண்ணரசி ஆகியவை.1956ல் டவுன் பஸ் படத்திற்கான கதை இவருடையது.தொடர்ந்து நான் பெற்ற செல்வம்,மக்களைப் பெற்ற மகராசி,சம்பூர்ண ராமாயணம் என தொடர்ந்தது.

வி.கே.ராமசாமி யுடன் இணைந்து    படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார்.நல்ல இடத்து சம்பந்தம்,தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை,நீலாவுக்கு நிறைஞ்ச மனசு,அல்லி பெற்ற பிள்ளை என திரைப்படங்கள் வெளி வந்தன.

பின் இவரே திரைக்கதை, வசனம், இயக்கம் என படங்களை எடுக்க ஆரம்பித்தார்.இயர் இயக்கத்தில் வந்த படங்கள் அனைத்தும் கூற ஆசை.அவை வந்த ஆண்டு அடைப்புக் குறியில்...

வடுவுக்கு வளைகாப்பு (1962)
குலககள் ராதை (1963)

தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் ஆரம்பித்து..படங்களைத் தொடர்ந்தார்..

நவராத்திரி (1964)  சிவாஜி கணேசனின் நூறாவது படம்
திருவிளையாடல் (1965)
சரஸ்வதி சபதம் (1966)
திருவருட்செல்வர் (1967)
சீதா (1967)
கந்தன் கருணை (1967)
திருமால் பெருமை (1968)
தில்லானா மோகனாம்பாள் (1968)
வா ராஜா வா (1969)
குருதட்சணை (1969)
விளையாட்டுப் பிள்ளை (1970)
திருமலை தெங்குமரி(1970)
கண்காட்சி (1971)
அகஸ்தியர் (1972)
திருமலை தெய்வம் (1973)
ராஜ ராஜ சோழன் (1973)
காரைக்கால் அம்மையார் (1973)
குமாஸ்தாவின் ,மகள் (1974)
மேல் நாட்டு மருமகள் (1975)
நவரத்தினம் (1977)

தமிழில் சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவர் விருது தில்லானா மோகனாம்பாள் படத்திற்கும், திருவிளையாடல் படத்திற்கும் கிடைத்தது.

1977ல் அமரர் ஆனார்.

No comments:

Post a Comment