Thursday, August 11, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 31 கிருஷ்ணன்-பஞ்சு

                               
 

கிருஷ்ணன்-பஞ்சு என உடன் பிறவா இரட்டையர்கள் இருவரும்   சேர்ந்து 50க்கும் மேற்பட்டப் படங்களை இயக்கியுள்ளனர்

கோவையில் கந்தன் ஸ்டூடியோ (பின்னர் பக்ஷிராஜா ஸ்டுடியோவாயிற்று)வில் லேபரட்டரியில் வேலை செய்து வந்தவர் கிருஷ்ணன்.1909ல் சென்னையில் பிறந்தவர்

பஞ்சு எங்கிற பஞ்சாபகேசன் உமையாள்புரத்தில் 1915ல் பிறந்தவர்.ராஜா சாண்டோ மற்ரும் எல்லிஸ் டங்கனிடம் பணி புரிந்தவர்

ராஜா சாண்டோ கந்தன் ஸ்டூடியோவில் ஆராய்ச்சி மணி படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.அப்போது, அவருடன் ப ணி  புரியும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது..இவர்கள் திறமையைக் கண்ட சாண்டோ "பூம்பாவை" என்னும் படத்தை இயக்கும் வாய்ப்பை இவர்களுக்குக் கொடுத்தார்.இதுவே இவர்களின் முதல் படமாகும்

பின் பைத்தியக்காரன், நல்லதம்பி ஆகியவற்றை இயக்கும் வாய்ப்பை என்.எஸ்.கே இவர்களுக்கு அளித்தார்.நல்லதம்பி , அண்ணா அவர்களின் கதை வசனமாகும்

பின்னர், கலைஞரின் கதை ,வசனத்தில் 1952ல் பராசக்தி யை இயக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது.சிவாஜி அறிமுகமான படம்.உடன் எஸ் எஸ் ராஜேந்திரனும் அறிமுகம்.

அடுத்து ரத்தக்கண்ணீர் (எம்.ஆர்.ராதா) இயக்க வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது.

தொடர்ந்து இவர்கள் இயக்கியப் படங்கள் வருமாறு

கண்கள்,குலதெய்வம்,புதையல்,மாமியார் மெச்சிய மருமகள், தெய்வப்பிறவி,அண்ணை,குங்குமம்,வாழ்க்கை வாழ்வதற்கே,சர்வர் சுந்தரம்,குழந்தையும் தெய்வமும்,பெற்றால் தான் பிள்ளையா,உயர்ந்த மனிதன்,எங்கள் தங்கம்,பிள்ளையோ பிள்ளை,பூக்காரி, என 40க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களை இயக்கினர்.

இதனிடையே 10க்கும் மேற்பட்ட ஹிந்தி ஒரு மலையாளம், ஒரு கன்னடம், 7 தெலுங்குப் படங்கள் இவர்கள்  இயக்கத்தில் வந்தன.

1984ல் பஞ்சு மரணமடைந்தார்.

பின் கிருஷ்ணன் வேறு எந்தப் படத்தையும் இயக்கவில்லை.1997ல் இவரும் அமரர் ஆனார்

No comments:

Post a Comment