Tuesday, August 30, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 70 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்




1930ல் பிறந்தவர் கே.பாலசந்தர்

இவரைப் பற்றி, இவர் இயக்கியப் படங்கள் பற்றி, இவர் தயாரித்த படங்கள் பற்றி , இருபது...முப்பது வரிகளில் எழுதிட இயலுமா?

அடடா...எவ்வளவு சாதனைகள்! அவர் படத்தில் ஒரு பாடல் நினைவில் வருகிறது "கங்கை நீர் சொம்புக்குள் அடக்கிட முடியுமா?"

ராகினி ரெக்ரியேஷன்ஸ் என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார் .எதிர்நீச்சல், னவக்கிரகம், மேஜர் சந்திரகாந்த் என பல வெற்றி நாடகங்கள்.டிக்கெட் கிடைக்காமல் அவரது ரசிகர்கள் திரும்பினர்.

நாடக உலகில் சிகரத்தை எட்டியவருக்கு திரையுலக பிரவேசம், பூஜைக்கு வந்த மலர், நீலவானம், தெய்வத்தாய் படங்கள் மூலம் அமைந்தது.இப்படங்களின் கதை இவருடையது.

ஏ.கே.வேலன் மூலம் இவரது நீர்க்குமிழி படமானது.பாலசந்தரும் இயக்குநராக இப்படம்மூலம் அறிமுகமானார்
தொடர்ந்து தமிழில் மட்டும் 70 படங்களுக்கு மேல் இயக்கினார்.ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என இவர இயக்கம் 100படங்களுக்குமேல் .

1960-70...இந்த பத்தாண்டுகளில் வந்த படங்களில் சில-  எதிர்நீச்சல்,மேஜர் சந்திரகாந்த்,பாமா விஜயம்,இரு கோடுகள், நாணல்,அனுபவி ராஜா அனுபவி,தாமரை நெஞ்சம்,பூவா தலையா,நவக்கிரகம்,காவியத்தலைவி,நூற்றுக்கு நூறு

1970-80 களில் வந்த சில படங்கள் - புன்னகை,கண்ணாநலமா>வெள்ளிவிழா,அரங்கேற்றம்,சொல்லத்தான் நினைக்கிறேன்,அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள்,மன்மத லீலை,மூன்று முடிச்சு,அவர்கள்,பட்டிணப்பிரவேசம்.நிழல் நிஜமாகிறது,தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும்,நூல்வேலி,வறுமையின் நிறம் சிவப்பு, தில்லுமுல்லு

1981-90  வந்தப் படங்கள்-  தண்ணீர் தண்ணீர்,47 நாட்கள்,அக்னி சாட்சி,அச்சமில்லை அச்சமில்லை,சிந்து பைரவி,புன்னகைமன்னன்,மனதில் உறுதி வேண்டும்,உன்னால் முடியும் தம்பி,புதுப்புது அர்த்தங்கள்,ஒரு வீடு இரு வாசல்

1991-2000- வந்த படங்கள் - அழகன், வானமே எல்லை,ஜாதிமல்லி,டூயட்,கல்கி

200க்கு-ப் பிறகு,,, பார்த்தாலே பரவசம், பொய்

தவிர்த்து, பொய், ரெட்டைச் சுழி,உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார்

பெற்ற விருதுகள்- தேசிய விருது சமுக நலனுக்கானது ஒரு வீடு இரு வாசலுக்கு
அச்சமில்லை அச்சமில்லை- சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது
தண்ணீர் தண்ணீர்- தேசிய விருது சிறந்த தமிழ்ப் படம்
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது தண்ணீர் தண்ணீர் படத்திற்கு
சிறந்த தமிழ்ப் படத்திற்கான  தேசிய விருது இருகோடுகள் படத்திற்கு
சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருது அபூர்வ ராகங்கள்.

இவற்றைத் தவிர்த்து தமிழக அரசு விருதுகள், ஆந்திர பிரதேச விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருது என ஏகப்பட்ட விருதுகள்

 தவிர்த்து குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட    தாதாசாகிப் பால்கே விருது, பத்மஸ்ரீ விருது

கமல் ஹாசனை கதானாயகன் ஆக்கியது, ரஜினியை அறிமுகம் செய்தது தவிர்த்து ஃபடாஃபட் ஜெயலட்சுமி,ஸ்ரீபிரியா,விஜயகுமார்,ஜெயகணேஷ்,ராதாரவி,டெல்லி கணேஷ்,சிவசந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் அறிமுகம் செய்தவர்.

தவிர்த்து, தமிழில், சுஜாதா, ஷோபா,சரத்பாபு,பிரகாஷ்ராஜ் , சரிதா போன்றோரை   .அறிமுகம் செய்தவர்

விசு, மௌலி ஆகியோரை இயக்குனராக்கினார்

தெலுங்கில் இவர் இயக்கிய மரோசரித்ரா 1978ல் வெளிவந்து சென்னை சஃபைர் தியேட்டரில்  596 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது,ஆந்திராவில் 450 நாட்கள் ஓடியது கமல், சரிதா நடித்தனர்.

ஹிந்தியில் சரிதாவிற்கு பதில் ரதி அக்னிஹோத்ரி நடிக்க கமல் நடித்தார்.எஸ் பி.பாலசுப்ரமணியம், பின்ன ணிப்   பாடகராக ஹிந்தியில் அறிமுகம்


இவ்வளவு சாதனைகளுடன் நில்லாது, தனது கவிதாலயா படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்தார்.அவற்றுள் சில...

எனக்குள் ஒருவன், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி

நெற்றிக்கண்,புது கவிதை,நான் மகான் அல்ல,ராகவேந்தர்,வேலைக்காரன்,சிவா, அண்ணாமலை  ,முத்து

மணல் கயிறு, அண்ணே அண்ணே

சி என் என்/ஐ பி என் 100 சிறந்த படங்கள் என பட்டியல் இட்ட படங்களில் மரோ சரித்ரா ஹிந்தி, தெலுங்கு இரண்டும் இடம் பெற்றுள்ளன.

2014ல் அமரர் ஆனார்

(சாதாரணமாகவே பல புள்ளிவிவரங்களைக் கொட்டும் நண்பர்கள் இப்பதிவிற்கு 100க்கு மேல் தங்கள் எண்ணத்தைப் பதிவார்கள் என நம்புகிறேன்.திரைப்படங்களின் கதையைத் தவிர்க்கவும்)

கங்கை நீர் சிறிதை சொம்புக்குள் அடக்கிவிட்டேன்...

இவ்வளவுதான்......என்னால் முடியும் தம்பி

(இயக்குநர் சிகரம் கேபி என்று அவர் படங்கள் .அவரது ஆரம்பகால நாடகங்கள் பற்றி நான் ஒரு புத்தகம் எழுதியுள்ளேன்)


No comments:

Post a Comment