Tuesday, August 16, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 50 ருத்ரையா

                           


ஒரே படத்தில் மூலம் திரையுலகில் அழியாப் புகழ் பெற முடியுமா?

முடியும் என நிரூபித்தார் ஒரு இயக்குநர்...

அவர்.....

ஆம்...ருத்ரையா தான்

அந்தப் படம் "அவள் அப்படித்தான்"(கமல் ரஜினி, ஸ்ரீபிரியா நடித்தது)

1947ல் பிறந்தவர் இவர்

தமிழ்நாடு ஃபில்ம் இன்ஸ்டிடூட்டில் படித்தவர் இவர்.

அவள் அப்படித்தான் 1978ல் வந்த படம்.வித்தியாசமான கதைக்களன்.படம் முழுதும்,  குளோசப்      ஷாட்ஸ், நிழல்..என வித்தியாசக் கோணங்களில் எடுக்கப் பட்டிருந்தது இப்படம்.

தமிழ் மொழிப் படங்களில்    இது ஒரு மைல்க ல்  என்றார் மிரிணாள்சன்

இவரது அடுத்த படம் கிராமத்து அத்தியாயம் ,   சந்திர ஹாசன் நடித்தது.

இதற்குப் பின் தன் திரையுலகப் பயணத்தை அவரால் தொடரமுடியவில்லை..

கமல், நடிக்க "ராஜா என்னை மன்னித்து  விடு" என்னும் படத்தை ஆரம்பித்தார்.னாற்பது விழுக்காடு முடிந்த நிலையில் ஸ்டார் வேல்யு இல்லை என கமல் விலகிக் கொள்ள படம் தொடர இயலவில்லை.

உண்மையைத் தேடி என்ற படத்தை ஆரம்பித்து அதுவும் பாதியில் நின்று போனது.

டிஎக்ஸ்டி 7 என்ற சுஜாதாவின் கதையை ரகுவரனை வைத்து ஆரம்பித்தார்.அதுவும் பாதியில் நின்றது

பின் வீடு அர்ச்சனாவை வை வைத்து கடல்புரத்தில் என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார்.ஆனால், பாதியில், அதன் தயாரிப்பாளர்கள் அதை தொலைக்காட்சிக்கு ஏற்ப மாற்றி சென்னை தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பினர்.

எல்லா விஷயங்களிலும் தோல்வி....

2014ல் அவர் அமரர் ஆனார்

ஒரு திறமையான இயக்குநரை திரையுலகு சரியாய் பயன்படுத்திக் கொள்ளாதது துரதிருஷ்டமே! 

No comments:

Post a Comment