Sunday, August 7, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 25 எஸ்.பாலசந்தர்

                         


1927ல் சென்னையில் பிறந்தவர் எஸ்.பாலசந்தர்.

வீணை வித்வான்,இயக்குநர்,ஒளிப்பதிவாளர்,பின்ன்ணிப் பாடகர்,இசை அமைப்பாளர்,கவிஞர்,நடிகர் என அனைத்தும் அறிந்த கலைஞன் இவர்.

தபேலா.மிருதங்கம்,ஹார்மோனியம், ஷெனாய் என இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்.

1934ல் தன் ஏழு வயதிலேயே இராவணன் அரசவையில் ஒரு சிறுவன் பாடகனாக சாந்தாராம் தயாரித்த சீதாகல்யாணம் படத்தில் நடித்தார்.பின் 1941 ரிஷ்யசிங்கர்,1942ல் ஆராய்ச்சிமணி ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் நடித்து வந்த படங்கள் தேவகி (1951) ராஜாம்பாள் (1951)ராணீ (1952)இன்ஸ்பெக்டர்(1953) பெண் (1954)கோடீஸ்வ்ரன் (1955)டாக்டர் சாவித்ரி (1955) மரகதம் (1959) ஆகியவை

இது நிஜமா? (1948)  என் கணவர் (1948)  கைதி (1949) ஆகிய படங்களை இயக்கி நடித்தார்.

1954ல் ஏவிஎம் எடுத்த அநதநாள்.பாடல்கள் இல்லாத படம்.சிவாஜி கணேசன், பண்டரிபாய் நடித்தது.இவர் இயக்கம்.அந்த நாளின் வெற்றி இந்த நாள் வரை பேசப்பட்டுக் கொண்டிருப்பது இவர் சிறப்பு.

பின் பூலோகரம்பை,அவன் அமரன்,பெண் ஆகிய படங்களில் நடித்தார்.இரண்டு தெலுங்குப் படங்களில் நடிப்பு வேறு.

1960ல் எஸ் பி கிரியேஷன்ஸ்ஆரம்பித்து அவனா இவன்(1962),பொம்மை (1964_ நடு இரவில் (1965) ஆகிய படங்களுக்கு இசை அமைத்து, பாடல்கள் எழுதி, நடித்து,தயாரித்து, இயக்கினார்.

முத்ன் முதலாக தன் பொம்மை படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரையும் படத்தின் முடிவில் திரையிலேயே அறிமுகப்படுத்தி புதுமைப் புரிந்தார்.

யேசுதாஸ் , இவர் பொம்மை படத்திதான் சினிமா பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.

1990ல் பிலாயில், ஒரு இசைக்கச்சேரிக்குச் சென்ற போது அங்கு அமரர் ஆனார்.

பன் திறமைக் கலைஞர் எஸ்.பாலச்ந்தரை திரையுலகம் என்றும் மறவாது எனலாம்.

(இவரது அண்ணன் எஸ் ராஜம் ஒரு பிரபல பாடகர்.இவரது சகோதரி ஜெயலட்சுமி சிவகவி படத்தில் தியாகராஜ பாகவதருக்கு கதாநாநாயகியாய் நடித்தவர்)

No comments:

Post a Comment