Tuesday, August 30, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 69 பஞ்சு அருணாசலம்



பட அதிபர் ஏ.எல்.ஸ்ரீனிவாசன், கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பனின் மகன் பஞ்சு அருணாசலம் ஆவார்.1941ல் பிறந்தவர்.

இவர், பாடலாசிரியர்,தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார்

ஆரம்ப நாட்களில் ஏ எல் எஸ் அவர்களிடம் திரையுலகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அன்னக்கிளி படத்தயாரிப்பாளரான இவர் அப்படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.அப்படத்தில், இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகமானார்

எஸ் பி முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மெல் இவரது கதை வசனத்தில் உருவானவையாகும்

ரஜினி காந்த், கமல் ஹாசன் ஆகியோரை வைத்து அதிகப் படங்களைத் தயாரித்தவ்ர் இவர்

இவரது இயக்கத்தில் வந்த சில படங்கள்

1977ல் இளைய தலைமுறை
1977ல் என்ன தவம் செய்தேன்
1977ல் சொன்னதைச் செய்வேன்
1979ல் நாடகமே உலகம்
1988ல் மணமகளே வா
1990ல் புதுப்பாட்டு
1992ல் கலிகாலம்
1992ல் தம்பிப் பொண்டாட்டி

இவரது தயாரிப்பில் வந்த வெற்றிப் படங்கள் சில

ஆரிலிருந்து அறுபதுவரை (ரஜினி).
கல்யாண ராமன் (கமல்)
எங்கேயோ கேட்ட குரல்
ஜப்பானில் கல்யாணராமன்
மைக்கேல் மதன காமராஜன்
வீரா
ரிஷி
குரு சிஷ்யன்

எழுத்தாளர் என்ற வகையில் 40 படங்களுக்கு மேல் இவரது பங்கு உள்ளது /அவர்றுள் சில

சிங்கார வேலன், அபூர்வ சகோதரர்கள்,ராஜா சின்ன ரோஜ,டஹ்ர்மத்தின் தலைவன்,டஹ்ம்பிக்கு எந்த ஊரு,தூங்காதே தம்பி தூங்காதே,பாயும் புலி, எங்கேயோ கேட்ட குரல்,சகல கலாவல்லவன்,மீண்டும் கோகிலா,புவனா ஒரு கேள்விக்குறி

இவர் குறித்து எழுத வேண்டுமாயின் ஒரு த்னிப் புத்தகமே எழுதலாம்.

யாரேனும் முன் வந்தால் அப்புத்தகம் எழுதத்தயார்

2011ல் அமரர் ஆனார்  

No comments:

Post a Comment