Saturday, August 6, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 21 டி.யோகானந்த்

                                         


1922ல் மெட்ராஸில் (சென்னை) பிறந்தவர் தாசரி யோகானந்த்.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்.

எல்.வி.பிரசாத், கே.ராமபிரம்மம் ஆகியவர்களிடம் பணிபுரிந்து வந்த இவர் அம்மாலக்கலு(தெலுங்கு) மருமகள் படங்கள் மூலம் 1953ல் இயக்குநர் ஆனார்.

லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ் மூலம் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.பெரும்பாலும் தெலுங்கு படங்களையே இயக்கி வந்த இவர் 22 தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார்.

என்.டி.ராமாராவை வைத்து மட்டும் 17 படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் எம்ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி,நாகேஸ்வர ராவ்,பானுமதி,வைஜெயந்திமாலா போன்ற பிரபலங்கள் அனைவரையும் வைத்து படங்கள் இயக்கியுள்ளார்.

எம்.ஜி.ஆரை வைத்து இவர் இயக்கிய 'மதுரை வீரன்" மாபெரும் வெற்றி படமாகும்.

மருமகள்,காவேரி, மதுரை வீரன், அன்பு எங்கே,பூலோக ரம்பை,பார்த்திபன் கனவு, ரானி சம்யுகதா, பரிசு, தங்கைக்காக,ஜஸ்டிஸ் கோபினாத்.எமனுக்கு எமன் ஆகியவை இவர் இயக்கத்தில் வந்த சில படங்கள்.

2006ல் அமரர் ஆனார்


No comments:

Post a Comment