Friday, August 12, 2016

தமிழ்த் திரைப்ப்ட இயக்குநர்கள் - 35 முக்தா ஸ்ரீனிவாசன்


                 

1929ல் மணப்புரத்தில் பிறந்தவர் முக்தா ஸ்ரீனிவாசன்.

இவர் இதுவரை 65க்கும் மேற்பட்டப் படங்களை இயக்கியுள்ளார்.

இவரைப் பற்றி முழுமையாகச் சொல்ல வேண்டுமென்றால்...இந்தப் பக்கம் போதாது.கங்கை நீரை சொம்புக்குள் அடக்கிட முடியுமா?

இயர் இயக்கிய சில படங்களை மட்டும் பார்ப்போம்...

முதலாளி,நாலு வேலி நிலம், தாமரைக் குளம்,இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர்,தேன்மழை, நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், அருணோதயம், தவப்புதல்வன்,சூரியகாந்தி,(ஜெயலலிதா 100வது படம்), சினிமா பைத்தியம்,அந்தமான் காதலி,அவன் அவள் அது, பொல்லாதவன், கீழ் வானம் சிவக்கும்,பரிட்சைக்கு நேரமாச்சு

டி ஆர் சுந்தரத்திடம் பணி புரிந்தவர்.கருணாநிதியுடன் மந்திரிகுமாரியில் பணியாற்றியுள்ளார்

கெ.ராம்நாத்.   கே.எஸ்,சேதுமாதவன் ஆகியோரிடம் உதவி இயக்குநராய் இருந்துள்ளார்.

அந்த நாள் படத்தின் போது எஸ்.பாலசந்தருக்கு உதவியுள்ளார்.

நாயகன், கோடைமழை போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.

1962ல் முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனத்தை தன் சகோதரர் முக்தா ராமசாமியுடன் இணைந்துத் துவங்கியுள்ளார்



இது இவர் திரையுலகப் பணி

இவர் ஒரு எழுத்தாளர்.நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நூல்களையும் , ஆங்கிலம், தமிழ் மொழிகளில் எழுதியுள்லார்.
1994ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்பட வரலாறு என்ற நூலை தொகுத்துள்ளார்.

பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு கட்சிப் பணியாற்றியவர்.அக்கட்சி 1946ல் தடை செய்யப்பட்டபோது கைதானவர்.தன் சகோதரர் முயற்சியால் விடுதலையானார்.அதற்குப்பின் திரையுலகில் பணியாற்ற ஆரம்பித்தார்.

காங்கிரஸ் கட்சியில்  ஈடுபாடு கொண்டு  கட்சிப் பணியாற்றியுள்ளார்

முதலாளி படத்திற்கு குடியரசுத் தலைவரின் தேசிய விருதை குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிராத்திடம் பெற்றவர்

No comments:

Post a Comment